www.srilankanmuslims.net

           இலங்கை

செய்திகள்
கட்டுரைகள்
இலங்கை
முஸ்லிம் உலகம்
நூல் அறிமுகம்
சாதனையாளர்கள்
கலை
அல் குர்ஆன்
அல் ஹதீஸ்
அல்-உஸ்ரா
தொடர்புகளுக்கு
Technical Help
முகப்பு


புலிகளால் திட்டமிட்டு எழுப்பப்பட்ட தடைச்சுவர்கள், கிழக்கில் மனிதாபிமான உணர்வுகளால் தகர்க்கப்படுகின்றன.**எம். பௌஸர்

பெரிய தம்பிப் புலவர் சொல்வது போல் 'ஹிருதயத்தின் ஈரிதழ்கள் போல், இந்து முஸ்லிம்கள் ஒட்டி உறவாடி வாழ்ந்தோம்' என்பதுதான் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் வாழ்ந்த தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வாகவிருந்தது. அந்த பசுமையான நினைவுகளைச் சுமந்த வாழ்வு கடந்த 20 வருடங்களாய் சின்னாபின்னப்படுத்தப்பட்டு, சீரழிக்கப்பட்டு எடுப்பார் கைப்பிள்ளையாகி மோதலும் முரண்பாடுமாக கழிந்து வந்திருக்கிறது.

இந்தக் காலப்பகுதியில் இரு இன மக்களும் ஒருவரோடு ஒருவர் எதிரிகளாக்கப்பட்டனர். எதிரிகளாக தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் கட்டமைக்கின்ற தேவை, ஆதிக்கத்தரப்பினருக்கு அவசியமாகவிருந்தது. இலங்கை அரசு கிழக்கு மாகாணத்தில் 1984களில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளுக்கு சிறு தீயை மூட்டியது என்றால், விடுதலைப் புலிகளின் அரசியல் அதனை காட்டுத் தீயாக பற்றி எரிய வைத்தது.நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் இந்த அரசியல் தீய்க்குள் கருகி மாய்ந்து, அன்றாட வாழ்வே அலைக்கழிந்தது.

இந்த நிலைமையை விடுதலைப்புலிகள், இலங்கை அரசு, முஸ்லிம் பாராளுமன்ற அரசியல் தலைமைகள் என தத்தம் நிலைமைகளுக்கும் வசதிகளுக்குமேற்ப கையாண்டு வந்தன. இந்த நிலைமையை மூலதனமாக்கியே முஸ்லிம் பாராளுமன்ற அரசியல் தலைமைகளும் பதவி சுகத்தை அனுபவித்தனர். இந்தச் சூழ்நிலையால் வடக்கு கிழக்கு தாயகப்பிரதேசத்திற்குள் வாழ்ந்து வந்த தமிழ் முஸ்லிம் மக்களிடையே இடைவெளிகள் அதிகரிக்கப்பட்டு, ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேச முடியாதவர்களாக தள்ளி வைக்கப்பட்டனர்.

உண்மையில் நாம் கடந்த கால நிகழ்வுகளையும் எத்தனங்களையும் மதிப்பிற்குட்படுத்துவோமாக இருந்தால், தமிழ் முஸ்லிம் மக்களிடையே அரசியல் நடாத்துகின்ற ஆதிக்கத்தரப்பினர், இதய சுத்தியுடன் இவ்விரு இன மக்களையும் இணைத்து ஐக்கியப்படுத்தி உறவாடி வாழவைப்பதற்கான எந்த முயற்சியையும் மக்களின் நல்வாழ்வு நோக்கில் நின்று கடந்த 20 வருட காலமாக எடுத்ததே இல்லை என்பதை கண்டு கொள்ள முடியும்! கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக நலன் விரும்பிகள், மனிதாபிமானச் செயற்பாட்டாளர்கள் எடுத்த சிறு சிறு முயற்சிகள் சாண் ஏற முழம் சறுக்கும் கதையாகவே இருந்து வந்தன.

இந் நிலையில், அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வும், இன உறவும் ஏற்பட்டு வருவதைக் காணமுடிகிறது. மக்களை வாழவைக்க முடியாத அரசியல் கோட்பாடுகள், கடந்தகால குரோத அரசியல், தொடர்ச்சியான யுத்தம், மனிதாபிமானமற்ற பக்கச்சார்பான நியாயப்படுத்தல்கள் தந்த மோசமான அனுபவங்கள் மக்களை யதார்த்தத்தின் அடிப்படையில் பல்வேறு விடயங்களைப்பற்றி ஆழமாக சிந்திக்கவும் அதனை நோக்கி செயற்படவும் தூண்டியிருக்கின்றன என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றன. போரும் இனக் கொலைகளும் இனக் குரோதமும் ஒழிக்கப்பட வேண்டும், மனிதர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்கிற உணர்வு வடக்கு கிழக்கு மக்கிளிடையே இன்று மேலோங்கி வருகிறது. இந்த உணர்வின் வெளிப்பாடு வடக்கு கிழக்கில் சகோதரர்களாய் வாழ்ந்துவந்த தமிழ் முஸ்லிம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசின் இராணுவ நடவடிக்கையின் காரணமாய், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு நகரையும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தஞ்சமடைந்துள்ள தமிழ் மக்களுக்கு, காத்தான்குடி முஸ்லிம் மக்கள் நீட்டியுள்ள மனிதாபிமான உதவிக்கரம், தமிழ் முஸ்லிம்களின் இணைந்த வாழ்வை விரும்புவோருக்கு நெஞ்சில் பாலை வார்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

காத்தான்குடி மக்களின் முன்மாதிரியான செயற்பாடும், அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பை உள்ளம் கிளர்ந்து ஏற்று நன்றியுடன் நினைவுகூறும் தமிழ் மக்களின் மன உணர்வுகளைக் கேட்கும்போது, கடந்த 20 வருடகாலமாக இரும்புத்திரை போட்டு மறுக்கப்பட்டும் மறைக்கப்பட்டுமிருந்த தமிழ் முஸ்லிம் மக்களின் உண்மையான, மனதின் அடியாழத்தில் இருந்த உணர்வுகளை துல்லியமாக எம்மால் உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

புலிகளின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான படுவான்கரைப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த இப்பிரதேச மக்களுக்கு முஸ்லிம்கள் பற்றி புலிகள் எந்த அபிப்பிராயத்தை ஊட்டி இருப்பார்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். புலிகளின் பள்ளிவாசல் படுகொலையாலும், குருக்கள்மடம் ஹாஜிமாரின் படுகொலையாலும், ஆயிரக்கணக்கான பொன் விளையும் விவசாய பயிர்ச்செய்கை நிலங்களை புலிகளிடம் 15 வருடமாக இழந்து நிற்பதாலும், புலிகளின் இராணுவ அடக்குமுறையால் தொடர்ச்சியாக நிம்மதியிழந்து நிற்கும் காத்தான்குடி முஸ்லிம்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து ஓடோடிவரும் தமிழ் மக்களுக்கு அண்மைக்காலமாக சமைத்த உணவு வழங்கியும் இன்றும் அம்மக்களுக்கு தம்மால் முடிந்த அடிப்படை உதவிகளை வழங்கவும் செயற்பட்டு வருவதை ஆழமாக நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

மலரத்துடிக்கும் இந்த மனிதநேய உறவுகளுக்கு வலுச் சேர்க்கவும், இந்த உணர்வுகள் வடக்கு கிழக்கு பிராந்தியம் முழுவதும் செயற்படவும் நாமும் முடியுமான அனைத்து பங்களிப்புகளையும் வழங்க வேண்டியவர்களாக உள்ளோம்! இன்று கிழக்கில் தோன்றியுள்ள சமூக உணர்வுகளை நாம் சரியாக மதிப்பிடுவோமானால் மேற் கூறப்பட்ட சம்பவம் புலித்தலைமைக்கு அதிர்ச்சியையே தந்திருக்கும். ஏனெனில் புலிகளால் தமது அரசியல் நலன்கருதி தமிழ் முஸ்லிம் மக்களிடையே திட்டமிட்டுக் கட்டியெழுப்பப்பட்ட தடைச்சுவர்கள் தகர்க்கப்பட்டு வருகின்றன என்பதனால்...



பொறியில் சிக்கிய புலிகள்

அரசுக்கு கயிறு கொடுக்க வெளிக்கிட்டு அதே கயிற்றினை விழுங்கிய புலிகள்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் மீது புலிகள் விமானத் தாக்குதல் என்ற பரபரப்புச் செய்திகள் வந்துகொண்டிருக்க உண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தான தகவல்கள் நம்பகரமான பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளன.

உண்மையில் கட்டுநாயக்கா பகுதியில் புலிகளின் விமானத்தாக்குதலே நடைபெறவில்லை இதுதான் முழு உண்மை.

தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தொடர் தோல்விகளை மறைக்க ஒரு மாபெரும் தாக்குதல் ஒன்றினை நடாத்தவேண்டிய நெருக்கடியான தேவை ஒன்று புலித்தலமையிடம் காணப்பட்டது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதே விமானத்தாக்குதல் என்ற மாய்மாலத்திட்டமாகும். எவ்வகையிலும் நிலப்பகுதியூடாக உட்பிரவேசிக்க முடியாத கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்தின் மீது கடல் வழியாக வந்து களப்பு வழியாக நுழைந்து சற்றே அதிக தூரம் செல்லக்கூடிய மோட்டார் குண்டுகள் ஏவப்பட்டே நள்ளிரவில் விமானக் குண்டுவீச்சு போன்ற தோற்றம் ஏற்படுத்த புலிகளால் திட்டமிடப்பட்டது.

தற்போது கிடைத்துள்ள நம்பகரமான தகவல்களின்படி இத்திட்டம் இலங்கை ராணுவ தரப்பினருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. இறுதிக்கட்டம் வரை புலிகளை நன்றாக உள்நுழைய அனுமதித்த படைத்தரப்பு ஒரு கட்டத்தில் தாக்குதல் தரப்பினரை ஒட்டுமொத்தமாக அமுக்கியபின் ஏற்கனவே திட்டமிட்டபடி தயார் படுத்தப்பட்டிருந்த தமது படையினரைக் கொண்டு முக்கியத்துவம் இல்லாத பகுதிகளை நோக்கி தாமே தாக்குதலை மேற்கொண்டனர்.

அதிலும் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் புலிகள் உரிமை கோரமுதலே புலிகள் வான் தாக்குதலை நடாத்திவிட்டதாக அரசாங்கமே முந்திக்கொண்டு சகட்டுமேனிக்கு பரபரப்புச் செய்திகளை வெளியிட்டது.

புலித்தலைவர்கள் கடும் குழப்பம்.

நிச்சயமாக வான்புலித்தாக்குதல் என்ற விடயத்தை அரசாங்கம் ஒத்துக்கொள்ளப் போவதுமில்லை. ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை என நினைத்துக்கொண்டு ஏற்கனவே தயார் படுத்தப்பட்டிருந்த புகைப்படங்கள் உட்பட தமது சர்வதேச பிரசார இயந்திரங்களை உஷார் படுத்தியிருந்த புலிகள் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பினால் ஒரு கணம் ஆடித்தான் போய்விட்டார்கள். அரசாங்கம் சேம் சைட் கோல் போட்டது ஏன் என்ற விடயம் இதேதினம் மாலைதான் புலிகளுக்கு வெளித்தது. மோட்டார் தாக்குதலை நடாத்திவிட்டு கடல் வழியாக தப்பி வந்து சேரவேண்டியவர்கள் ஒருவர் கூட மிஞ்சவில்லை. முதலில் தொலை தொடர்பு சிக்கல் காரணமாகத்தான் தொடர்பு கிடைக்கவில்லை என நினைத்த புலித்தலைவர்கள், அரசாங்கமே புலிகளின் வான் தாக்குதலை உரிமையும் கோரி ஆரவாரப்படாமல் காய்களை நகர்த்த தொடங்கிய பின்னர்தான் வெலவெலத்துப் போய்விட்டார்கள்.

ஆயினும் முன் வைத்த காலை பின்வைக்க முடியாத நிலை புலிகளுக்கு. தமது பினாமி ஊடகங்கள் மூலமாக செட்டப் போட்டோக்களையும் வெளியிட்டு விட்டனர். நாய் வேஷம் போட்டுவிட்டோம். குரைக்காமல் இருக்க முடியாது என்பது 12 மணித்தியாலங்கள் கழிந்தே உணர்ந்து கொண்டனர்.

அது சரி. ஏன் அரசாங்கம் அவ்வாறு நடந்து கொண்டது? தற்போது நடைபெற்று வரும் யுத்தத்தில் போர் விமானங்களின் பங்களிப்பையே அரசாங்கம் முழுமையாக நம்பியுள்ளது. ஆயினும் எவ்வளவு கவனமாக தாக்குதல் நடாத்தினாலும் அண்மைக்காலத்தில் நடாத்தப்பட்ட விமானத்தாக்குதல்களில் குழந்தைகள் பெண்கள் மாணவர்கள் என பலதரப்பட்ட அப்பாவிகளும் பாதிக்கப்பட்டிருந்ததை எவரும் மறுக்க முடியாது. ஒரு கட்டத்தில் சர்வதேச ரீதியில் அரசாங்கத்திற்கு பெரும் அபகீர்த்தி ஏற்படுத்தும் ஓர் செயலாகவே விமானத்தாக்குதல்கள் விளங்கின. விமானத்தாக்குதல் இல்லாமல் யுத்தத்தில் வெற்றிபெறவும் முடியாது. அதேநேரம் அபகீர்த்தியும் ஏற்பட்டுவிடக்கூடாது. அதாவது விமானத் தாக்குதலும் நடாத்த வேண்டும். ஆனால் பழியும் வரக்கூடாது. அதற்கு கோத்தபாயக்களுக்கு தோன்றிய ஒரே ஐடியாவே எப்படியாவது மருந்துக்கென்றாலும் புலிகள் ஒரு வான் தாக்குதலை நடாத்த வேண்டும். அல்லது புலிகள் நடாத்தியதாக தாமே ஒரு வான் தாக்குதல் நாடகத்தை நடாத்தவே புலனாய்வுப்பிரிவினரைக் கொண்டு திட்டமிட்டதாக நம்பகரமாக அறிய முடிகின்றது.

ஏனெனில் பயங்கரவாத இயக்கம் ஒன்று வான்படை வைத்திருப்பதாக நிரூபித்தால் எந்த ஒரு இறைமையுள்ள நாடுகளும் அதை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. மறுபுறம் அப்பேற்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக வான் தாக்குதலே ஒரே வழி என பிரகடனம் செய்து சகட்டு மேனிக்கு குண்டுத்தாக்குதலை போட்டு நியாயப்படுத்தலாம். எவரும் எதுவும் கேட்கப்போதில்லை. அது மட்டுமன்றி வான்படையுள்ள புலிகளை காட்டிக்காட்டியே சர்வதேசத்திடம் ஆயுத தளபாட உதவிகளை அள்ளோ அள்ளு என்று அள்ளலாம்.

இவை எல்லாவற்றையும் நன்றாக திட்டமிட்டு காரியத்தை நகர்த்திய படைத்தரப்பு கச்சிதமாக தமது நோக்கத்தினை நிறைவேற்றி விட்டார்கள். காலம் கடந்து முழித்துக் கொண்ட புலிகள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விமானத்தாக்குதல் என்று அரசாங்கமே முன்வந்து அறிவித்து கொடுத்த வெற்றியை முழுங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்பேற்பட்ட பாரதூரமான விடயம் இ;டம்பெற்றும் கூட எந்த ஒரு படைஉயர் அதிகாரிகளோ அல்லது அரச தலைவர்களோ அலட்டிக் கொள்ளவில்லை. அவ்வளவு ஏன் ராடாரில் பணிபுரியும் ஒரு சாதாரண தொழில் நுட்பவியலாளர் கூட வேலையில் இருந்து இடைநிறுத்தப்படவில்லை. (சிலவேளைகளில் கண்துடைப்புக்காக கடமையில் இருந்து இடைநிறுத்தம் என்ற நாடகம் இனிமேல் நடத்தப்படலாம்) இவ்வேளை முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் 2001ம் ஆண்டில் கட்டுநாயக்கா விமான நிலையம் மீது உண்மையிலேயே புலிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியதன் பின்னர் தமது கடமையினை சரியாக செய்யவில்லை என பல படையினர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டது மட்டுமன்றி கைது செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றத்தின் முன் கூட நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படைவலு நிலையில் இப்படியென்றால் அரசியல் நிலமையிலும் முழு ஆதாயத்தினையும் தான் அள்ளிக் கொள்வதே பசில்களின் திட்டம். வான்புலித்தாக்குதல் பழியை அப்படியே ஐ.தே.கட்சி மீது திருப்பிவிடும் பணி உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. 2002 யுத்த நிறுத்த உடனபடிக்கையின் பின்னரே இரணைமடு ஓடுபாதை அமைக்கப்பட்டது. அக்காலப்பகுதியில்தான் விமான உதிரிப்பாகங்கள் புலிகளைச் சென்றடைந்தன போன்ற அடிமட்ட மக்களைக்கூட திசைதிருப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் நாட்களில் தங்குதடையற்ற முறையில் இல்லாத புலிகளின் வான்படையினை தாக்குவதாகக் கூறி சகட்டுமேனி தாக்குதல்களை நடாத்த அரச படையினருக்கு புலிகளே லைசன்ஸ் பெற்றுக் கொடுத்துள்ளனர் என்பதுதான் நிஜம்.

தகவல் தெரியப்படுத்தியோர்.

தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர்.

ஓய்வு பெற்ற ராணுவ புலனாய்வு அதிகாரி.

தற்போது கடமையிலுள்ள படை உயரதிகாரி.



இஸ்லாம் இராணுவ ரீதியில் பரப்பப்பட்டதா? ரணிலின் கருத்துக்கு உலமா கட்சி கண்டனம்!

மத்திய ஆசியாவில் இஸ்லாம் மதம் இராணுவ ரீதியாக பரப்பப்பட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார் என்று தெரிவித்திருக்கின்ற அகில இலங்கை முஸ்லிம் உலமாக் கட்சி, ரணிலின் இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டித்தும் இருக்கின்றது. இது தொடர்பாக இந்தக் கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

இஸ்லாம் இராணுவ ரீதியாக பரப்பப்பட்டதாலேயே மத்திய ஆசியாவில் பௌத்த மதம் அழிந்தது என பொறுப்பற்ற முறையில் உண்மையை திரிபு படுத்தி ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேசியுள்ளதன் மூலம் முஸ்லிம்களை மட்டுமல்ல பௌத்த மக்களையும் அவமதித்துள்ளார். வெறுமனே இராணுத்திற்குப் பயந்து தமது மதத்தை விட்டுக்கொடுத்தவர்களாக பண்டைய ஆசிய பௌத்த மக்களை இவர் சித்தரித்துள்ளதன் மூலம் அவர்களை அவமதித்துள்ளார்.

இஸ்லாம் எந்தவொரு காலத்திலும் இராணுவ ரீதியாகப் பரப்பப்படவில்லை என்பதை வரலாறு மிகத் தெளிவாகச் சொல்கிறது. அந்நிய சக்திகள் முஸ்லிம் நாடுகள் மீது போர்முரசு கொட்டியதன் காரணமாகவே முஸ்லிம் ஆட்சியாளர்களும் சில நாடுகள் மீது படையெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். தமது நாட்டையும் தமது மக்களையும் பாதுகாக்க நாட்டின் தலைவர்கள் படையெடுப்பதென்பது அதர்மமாகாது. ஆனாலும் சமர்கந்த் முதல் சீனா வரை எந்தவொரு இஸ்லாமிய இராணுவமும் இஸ்லாத்தை பரப்புவதற்காக அனுப்பப் பட்டதாக வரலாறு இல்லை.

முஸ்லிம்கள் இந்திய உபகண்டத்தை சுமார் 800 வருடங்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் இராணுவ ரீதியாக இஸ்லாத்தைப் பரப்ப நினைத்திருந்தால் முழு இந்தியாவை மட்டமல்ல சின்னஞ்சிறிய தீவான இலங்கையிலும் இஸ்லாத்தை இராணுவ ரீதியாக பரப்பியிருக்க முடியும். ஆனாலும் ஓர் இஸ்லாமிய போர் வீரனும் இங்கு வராமலேயே இஸ்லாம் இங்கு பரவியதன் காரணம் அதன் கொள்கை கோட்பாடும் அன்றைய முஸ்லிம்களின் நல்ல பண்புகளுமாகும்.

அதே போல் மாலைதீவு, மலேசியா, இந்தொனெசியா, தாய்லாந்து பொன்ற நாடுகளின் வரலாற்றை ஆராயும்போது அந்நாடுகளுக்கு முஸ்லிம்கள் இராணுவ ரீதியில் படையெடுத்ததாக வரலாறு இல்லை. மாறாக மகான் அப்துல் காதீர் ஜீலானி போன்ற பெரியார்களின் நல்வழிகாட்டல்கள் மூலமே அந்நாடுகளின் மன்னர்கள் கூட இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை வரலாற்றில் நாம் காண முடிவதோடு இன்றும் அம்மக்கள் இதனை பெருமையாகச் சொல்லிக் கொள்வதையும் காணலாம்.

ஆயுதத்திற்கு பயந்து தமது சமயத்தை விடக்கூடியவர்களாக அம்மக்கள் இருப்பார்களாயின் வெள்ளையர்களினதும், ஜப்பானியர்களினதும் காலனித்துவத்தின் கீழ் தமது இஸ்லாமிய மதத்தை கூட விட்டுருப்பார்கள். ஆகவே அம்மக்கள் ஆயுதத்துக்குப் பணிந்து சமயத்தை விட்டுக்கொடுப்பவர்கள் அல்லர். மாறாக கொள்கையை சரிவர உணர்ந்து ஏற்றுக்கொண்டவர்கள்.

வரலாற்று உண்மைகள்; இவ்வாறு இருக்க வெறுமனே எழுந்த மானமாக, கற்பனையாக சில யூத, நசாரா எழுத்தாளர்களின் பொய்யான குறிப்புக்களை படித்து விட்டு சிறிதும் சிந்திக்காமல் இஸ்லாம் இராணுவ ரீதியாக பரப்பப்பட்டது என பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பற்ற முறையில் கூறியிருப்பது முஸ்லிம்களை புண்படுத்துவதாகும்.

சரிந்துவரும் தமது அரசியல் செல்வாக்கை சரிசெய்து கொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு இனவாதத்தைப் பேசுவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ் - முஸ்லீம் இனஉறவுகள்

மேலும் வாசிக்க....



இந்திய அதிகாரிகளின் பிடியிலிருக்கும் சந்தேக நபர்களை விசாரணை செய்ய இலங்கை கோரிக்கை!

கடந்த வாரம் தென்னிந்தியக் கடற்பரப்பில் வைத்து இந்திய கரையோர காவற்படையினால் ஆயுதங்கள் சிலவற்றுடன் கைப்பற்றப்பட்ட படகில் இருந்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்கள் மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்போது தம்மையும் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு இலங்கைக் கடற்படை இந்தியாவிடம் கோரிக்கையொன்றினை விடுத்திருக்கிறது.


[1/2]