www.srilankanmuslims.net

முஸ்லிம் உலகம்

செய்திகள்
கட்டுரைகள்
இலங்கை
முஸ்லிம் உலகம்
நூல் அறிமுகம்
சாதனையாளர்கள்
கலை
அல் குர்ஆன்
அல் ஹதீஸ்
அல்-உஸ்ரா
தொடர்புகளுக்கு
Technical Help
முகப்பு

இஸ்ரேல் எப்படி தோன்றியது?

  • ரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் பெருந்தொகையாக வாழ்ந்து வந்த யூதாகளுக்கு அப்பிரதேசங்களில் தனியான நிலம் காணப்படவில்லை எனவே பிரான்ஸ், பிரித்தானியா அன்றிருந்த உஸ்மானிய சாம்ராஜ்யத்திடம் யூதர்களுக்கு தமது பிரதேசத்தில் வாழ்விடம் வழங்குமாறு கேட்க பாலஸ்தீன் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வாழ்வாதற்கு சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீத் இடமளித்தார். இவ்வகையில் இவர்கள் குறிப்பாக துருக்கியில் தஞ்சம் புகுந்தனர்

  • யார் இந்த யூதர்கள் ?? யூத, கிருஸ்துவ, முஸ்லிமல்லாத ஒருவரின் தேடல் .... நிலமெல்லாம் ரத்தம் பாகம் - 03

    அது, 44வது வருடம். அதாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய நாற்பத்து நான்காவது வருடம். ஜெருசலேம் நகரிலிருந்த நீதி மன்றத்துக்கு ஒரு வழக்கு வந்திருந்தது.


    செக்குக்கும், சிவலிங்கத்திற்கும் வேறுபாடு தெரியாத தெருநாயைப் போல காஷ்மீர் அப்பாவி முஸ்லிம்கள் மீது நடந்து கொள்ளும் இந்திய இராணுவம்!அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியங்கள்!

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குப்வாரா நகருக்கு அருகில் இருக்கும் சாஹல்பதி கிராமத்தைச் சேர்ந்த குலாம் மொஹைதீன் என்பவரும், ருபினா என்ற 14 வயது சிறுமியும் கடந்த ஆகஸ்டு 12ஆம் தேதி அதிகாலையில், ''ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ்'' என்ற துணை இராணுவப்படை சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அன்று அதிகாலையில் விறகு பொறுக்குவதற்காகக் காட்டுக்குள் சென்றதுதான் அவர்கள் செய்த ''குற்றம்''; அதற்குத்தான் இந்த மரண தண்டனை!


    நிலமெல்லாம் ரத்தம் - பாலஸ்தீனப் பிரச்சினையின் அடிவேர்கள்

    எமது இணையத்தள வாசகர்களின் நலன் கருதி "முஸ்லிம் உலகம்" பகுதியில் புதிய தொடர் ஒன்றை தொடர்ச்சியாக மீள் பிரசுரம் செய்வற்கு உங்களது இணையத்தள குழு தீர்மானித்துள்ளது.


    ஈராக்கின் ஹதிதா கிராமம் - அமெரிக்க ராணுவ அறிக்கைகளின் கேடித்தனம்

    ஈராக்கின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹதிதா என்ற சிறு நகரம், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடும் சுன்னி பிரிவு முஸ்லிம்கள் போராளிகளின் செல்வாக்கு நிறைந்த பிராந்தியம். இதன் காரணமாகவே ஹதிதா, அமெரிக்க இராணுவத்தின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று அதிகாலை நேரத்தில் இந்நகரைச் சேர்ந்த 23 ஈராக்கியர்கள் துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டு இறந்து போனார்கள். அகால மரணமடைந்த இந்த 23 பேரில், மூன்று குழந்தைகள், ஏழு பெண்கள், மற்றும் நடக்கவே முடியாத முதியவர் ஒருவரும் அடங்குவார்கள்.

    இந்தச் சம்பவம் குறித்து மறுநாள் நவம்பர் 20 அன்று அறிக்கை வெளியிட்ட அமெரிக்க இராணுவம் ''இறந்து போனவர்களுள் 8 பேர் தீவிரவாதிகள்; 15 பேர் பொதுமக்கள். தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க இராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தபொழுது, அதனிடையே மாட்டிக் கொண்டு இந்த 15 பேர் இறந்து போனதாக''க் குறிப்பிட்டுள்ளது. ஈராக்கில் அன்றாடம் நடக்கும் உயிர்ப் பலிகளில் இதுவும் ஒன்று எனக் கருதி இதனை உலகம் மறந்துவிட்ட நிலையில், இப்பொழுது இச்சம்பவம் நடந்து ஏழு மாதங்கள் கழித்து உண்மைகள் மெதுவாகக் கசியத் தொடங்கியுள்ளன.

    நவம்பர் 19 அன்று அதிகாலையில் ஹதிதா நகரையொட்டிச் செல்லும் நெடுஞ்சாலையில் ரோந்து சென்று கொண்டிருந்த அமெரிக்க இராணுவக் கவச வாகனங்களுள் ஒன்று, கண்ணிவெடித் தாக்குதலுக்கு உள்ளாகி உருக்குலைந்து போனது. இத்தாக்குதலில் 20 வயதான டெர்ரஸஸ் என்ற அமெரிக்க இராணுவச் சிப்பாய் இறந்து போனதோடு, இரண்டு சிப்பாய்கள் காயமடைந்தனர். இதற்குப் பழிக்குப் பழிவாங்கும் வெறியோடு, அந்நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள வீடுகளுக்குள் புகுந்து அமெரிக்க இராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டதன் விளைவாகத்தான் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு 23 பேர் இறந்து போனார்கள்.

    இச்சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெடுஞ்சாலையில் கண்ணிவெடி வெடித்ததும், அதில் சிக்கி ஒரு சிப்பாய் இறந்து போனது மட்டும்தான் உண்மை. தீவிரவாதிகளோடு நடந்த துப்பாக்கி சண்டை, அவர்களிடமிருந்து இரண்டு ஏ.கே.47 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது போன்றவை அனைத்தும், தனது போர் குற்றங்களை மறைக்க அமெரிக்கா சோடித்துள்ள கட்டுக்கதை என்பதை நிரூபிப்பதற்கு ஏராளமான சாட்சியங்களும், ஆதாரங்களும் உள்ளன.

    ஒன்பது வயதான இமான் வாலீத் என்ற சிறுமியின் வீடு, கண்ணி வெடி தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 150 மீட்டர் தூரத்தில் உள்ளது. அமெரிக்க இராணுவம் இச்சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து சுட்டபொழுது, காலில் குண்டு காயத்தோடு மயிரிழையில் உயிர் பிழைத்து விட்டாள் இமான் வாலீத்.


    [1/2]