www.srilankanmuslims.net

செய்திகள்

செய்திகள்
கட்டுரைகள்
இலங்கை
முஸ்லிம் உலகம்
நூல் அறிமுகம்
சாதனையாளர்கள்
கலை
அல் குர்ஆன்
அல் ஹதீஸ்
அல்-உஸ்ரா
தொடர்புகளுக்கு
Technical Help
முகப்பு

 முஹம்மத்(ஸல்)அவர்களை இழிவுபடுத்திய ...

சூடானில் உள்ள சிறுவர் பாடசாலையொன்றின் ஆசிரியை "முஹம்மத் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியமைக்காக சூடான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜீலியன் ஜிபோர்ன்ஸ் (54 வயது) என்ற பிரித்தானியாவின் லிவெர்பூல் மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண்மணி,தனது வகுப்பு மாணவ மாணவிகளுக்கு (7 வயது )அவர்கள் விளையாடும் கரடி பொம்மையொன்றிற்கு "முஹம்மத்" என்று பெயரிடுமாறு கேட்டுள்ளார்.


 ஹமாஸின் மற்றொரு சாதனை

கடந்த 113 நாட்களாக பலஸ்தீன காஸா பகுதியில் கடத்தி வைக்கப் பட்டிருந்த பீ.பீ.சி யின் செய்தியாளர் அலன் ஜோன்ஸ்டன் இன்று (04ஃ07ஃ2007) அதிகாலை விடுவிக்கப் பட்டார். ஜைஷுல் இஸ்லாம் எனும் ஒரு சிறிய ஆயுதக் குழு சுமார் 4 மாதங்களாக அவரைக் கடத்தி வைத்திருந்ததுமட்டுமல்லாது கொன்றுவிடப் போவதாகவும் எச்சரித்திருந்தது. இந்நிலை சர்வதேச மட்டத்தில் பலஸ்தீன மக்களுக்கு பெரும் அபகீர்த்தியை உண்டாக்கியிருந்தது. மேலும் ஊடகத்துறையில் பல்வேறு பரிசுகளைப் பெற்றவரும் காஸாவில் தங்கியிருந்த ஒரே மேற்குலக செய்தியாளருமான அலன் ஜோன்ஸ்டன் கடத்தப் பட்டமை உலகின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்களையும் கொந்தளிப்புக்களையும் தோற்றுவித்திருந்தது.


 ஹமாஸ் கைப்பற்றிய 'உளவுத் துறைப் புதையல்'

காஸாவை ஹமாஸ் தன் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவந்ததும் குறிப்பாக அப்பாஸின் பாதுகாப்பு படை மற்றும் பலஸ்தீன உளவுத்துறையினரின் நிலைய கட்டடங்களை கைப்பற்றியதும் அப்பாஸின் தரப்பு, இஸ்ரேல் மற்றும் மேற்குலக உளவு அமைப்புகள் எல்லாம் கதி கலங்கின. ஹமாஸ் அங்கிருந்து மீட்டவற்றின் முக்கியத்துவம் காரணமாக 'ஹமாஸ் பெரும் உளவுப் புதையலொன்றை பெற்று விட்டது' என அமெரிக்கத் தரப்பு தன் ஆதங்கத்தை தெரிவித்தது. அக்கட்டடங்களை கைவிட்டு தப்பியோடிய தஹ்லானின் படையினர் குறித்து இஸ்ரேலிய அரசியல் ஆய்வாளர் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்: ' அமெரிக்காவின் பணத்தில் இஸ்ரேலின் ஆசியுடன் தஹ்லான் உருவாக்கிய ஆயுதப் படை ஹமாஸின் தாக்குதலில் கடதாசி கோபுரம் சரிவது போல் வீழ்ந்து போனது'.


 மேற்கத்தைய கூட்டாளிகள்..

ஆப்கானிஸ்தானின் அரசாங்கம் விரும்பும் வகையிலேயே இனிமேல் தமது மேற்கத்தைய கூட்டாளிகள் செயற்பட வேண்டும் என்று ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய் கூறியுள்ளார்.


 பக்தாதை வீழ்த்த அமெரிக்கா பயன்படுதிய...

ஸைபுத்தீன் அர்ராவி முன்னாள் இராக்கிய குடியரசு காவல் படைகளின் முக்கிய தளபதிகளுள் ஒருவர். அமெரிக்க படைகள் 2003இல் இராக்கை ஆக்கிரமித்த பின் தன்னால் தேடப் படும் மிக முக்கிய முன்னால் அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டன. அதில் உள்ளவர்களைகைது செய்ய உதவி செய்வோருக்கு ஒரு மில்லியன் டொலர் சன்மானமும் அறிவிக்கப் பட்டது. அந்த பெயர்ப் பட்டியலில் ஸைபுத்தீன் அர்ராவி 14வது இடத்தில் இருக்கிறார். இன்று வரை தலைமறைவாக இருக்கும் அவர் அமெரிக்கவின் மனிதாபிமானமற்ற அடாவடித்தனங்களை கடுமையாக சாடி அல் ஜஸீராவுக்கு பேட்டியொன்றை வழங்கியுள்ளார். இராக் வீழ்ச்சியடந்த நினைவை குறிக்கும் முகமாக அல்ஜஸீரா அவரது பேட்டியை 8-4-07 இல் ஒளிபரப்பாக்கியது. எனினும் அவரது பேட்டி எப்போது பதிவு செய்யப் பட்டது, எங்கே பதிவு செய்யப் பட்டது போன்ற தகவல் எதனையும் அல்ஜஸீரா வெளியிடவில்லை.

அமெரிக்க படைகள் இராக்கின் தலைநகரை கைப்பற்ற சற்று முன்பாக பக்தாத் விமான நிலையத்தை தாக்கிய போது நியுத்திரன் மற்றும் பொஸ்பரசு குண்டுகளை பயண்படுத்தியதாக இப்பேட்டியில் அவர் குறிப்பிட்டார். தனது முகத்தை கறுப்பு வெள்ளை துணிகொண்டு மறைத்தவாறு பேட்டிவழங்கிய அர்ராவி, அமெரிக்க படைகள் பயன்படுத்திய நியுத்திரன் ஆயுதங்கள் மனிதரைக் கொன்று அவர்களின் உடல்களை முழுமையாக எரித்துவிடும் ஆற்றலுள்ள அதேவேளை ஆயுதங்கள், கட்டடங்கள் முதலியவற்றை எத்தகைய சேதமும் இன்றி பாதுகாப்பாக விடக்கூடியனவாகும் என்று அவற்றின் தன்மைகளையும் விளக்கினார்.

மேலும் அமெரிக்க படைகள் பக்தாத் விமான நிலைய போராட்டத்தில் 9 தொன் எடைகொண்ட குண்டுகளையும் பொஸ்பரஸ் குண்டுகளையும் பயண்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

இப்போராட்டத்தில் நக்ஃபா படைகள் எனப் பட்ட இராக்கிய படைவீரர்கள் மரணம் வரை போராடியதாகவும் அவர்களில் எவருமே எஞ்சாமல் அனைவரும் கொல்லப் பட்டார்கள் என்றும் அர்ராவி உறுதிப்படுத்தினார்.


[1/3]